Pavusia


உளவியல்(மனோவியல்)

ஆன்மாவின் அறிவியல்.
தனிமனித உணர்வின் கட்டுப்பாடு, சிந்தனை, புரிதல் போன்ற கலவைகளின் கூடல் எனலாம்.
சில பகிர்வுகள்...
''தன் கண்ணில் இருக்கும் துரும்பை பாராமல் தன் சகோதரன் கண்ணில் இருக்கும் தூசியை பார்க்கிறான்''. இங்கு சில மனித கோடிகள் இப்படித்தான் தங்கள் வாழ்க்கை வாழ்க்கையை ஓட்டிச்செல்கிறார்கள். தான் குற்றவாளியாய் இருந்தும் பிறரை குற்றவாளி என்று தீர்ப்பிடுவது..
யாருக்கும் யாரையும் தீர்ப்பிடும் உரிமை இல்லை. அந்த அளவு யோக்கியவான்களும் இல்லை இவ்வுலகில்...

தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல் 
இது கொஞ்சம் கடினம் தான்
சொல்லப்போனால் சில பிரச்னைகளுக்கு நியாயம் தீர்க்கும் போது அவரவர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து விவாத மேடையாக்குவது வழக்கு ஆனால் பிறர் என்ன நினைக்கிறார் அவரது சூழ்நிலை என்ன என்பதை விவாதக்காரர்கள் புரிந்து கொண்டால் பாதி பிரச்சனை தீர்ந்து போம். பிறர் மனதை நோகடிக்கும் போதும் இப்படிப்பட்ட சிந்தனை பரிதலை ஏற்படுத்தி காயங்கள் வரவிடாமல் பண்ணலாம் என்பது என் கருத்து. நாம் அவன்/ள்/ர் இடத்தில் இருந்தால் என்ன சிந்திப்போம் எந்த விதமான உணர்வகள், ஏக்கங்கள் போன்ற கண்ணீர்த் தூளிகளை சலித்துப் பார்த்தால் பிரச்சனைகள் குறைக்கப்படலாம்.

  •  மாற்றம் உண்ணும் உணவில் மாற்றம்
  •  உடுத்தும் உடையில்  மாற்றம்
  • பேசும் தமிழில் மாற்றம்
  • பழகும் அன்பில் மாற்றம் 
ஆனால் மாற்றம் என்ற வார்த்தையை தவிர
அந்த மாற்றம் தனிமனித வாழ்க்கையை எவ்விதம்  புரட்டிப்போட்டு தன் சர்வாதிகாரத்தை செலுத்துகிறது என்பதை இன்றைய இளைய தலைமுறையிடம் காண முடிகிறது.

 தான் வாழும் சமுதாயத்தில் பிறர் தன்னை பார்க்க வேண்டும் என்றோ பலரின் விமர்சனங்களை பெற வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருக்கிறது. வட நாட்டு மோகமும் தாகமும் கொண்ட இளைஞர்கள் தாய் நாட்டின் காதலை மறக்கின்றனர். தாய் மொழி பேச கௌரவக் குறைச்சலாக எண்ணுகிறார்கள். 
இதனால்தான் மனதை குரங்கு என்கிறார்களோ என்னவோ???..

காதல் என்ற பெயரில் ஆண் பெண்ணை ஏமாற்றுவதும் பெண் ஆண்களை ஏமாற்றுவதும் நாகரிகமாகிப் போனது தான் மிச்சம்.
உண்மையான காதலும் இதில் இன்றும் வாழத்தான் செய்கிறது.
ஏமாற்றங்களே சந்திக்கும் வாழ்க்கையில் பூ பூத்தாற் போல காதலும் மலர்ந்தால் அந்த காதல் நிச்சயமாக உண்மையானதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் அன்பிற்காய் ஏக்கம் கொண்டவர்களாய் 
யார் தன்னை ஒரு குழந்தையாக பேண மாட்டார்களா தான் அவருக்கு தாயாக மாட்டோமா என்ற சில தாகங்கள்  உண்மையான காதலுக்கு இருக்கும். அப்படி பட்ட மனிதர்கள் வாழ்வில் விளையாடும் விளையாட்டு மரணமாக பாதிக்கக் கூடும் இதுவும் ஏமாற்றமோ என்று வெறுத்துப் போக வைக்கிறது தற்கொலை, கொலை போன்ற எண்ணம் உருவாக்கூடும். சிலர் விட்டுவிட்டு மற்றொருவரை வாழ வைப்பதும் சிலர் தங்கள் வாழ்வை கெடுத்து கொள்வதும் அன்றாட நிகழ்வாகிப் போனது. சற்று  உளவியல் ஆலோசனை கூறும் போது அவை தவிர்க்கப்படலாமே தவிர தீர்க்கப்படாது.
உண்மையாக காதலில் விழுந்து எழுந்தவனுக்கு மீண்டும் காதல் செய்ய தோன்றாது.
அப்படி வேறு ஒருவரை காதல் செய்யும் போது தான் இழந்த இன்பம் மீண்டும் பெற்று விட்டாற்போல நினைக்கலாம் ஆனால் அது சந்தேகத்திற்கும்
பிரிவுகளுக்கும் வித்திடும்.
வாழ்க்கையில் அதிகமாக அனுபவம் பெற்றாலோ அல்லது அடிபட்டு ேமலே வந்தாலோ தான் நிறைய சிந்திக்கவும் எழுதவும் தோன்றும்.
அப்படி என்றால் திருவள்ளுவர் எவ்வளவு அடிபட்டிருந்தால் அவ்வளவு அருமையான பாக்களை தந்திருக்க முடியும்..
ஒரு வேளை அவருக்கும்,,,,..... ???யாருக்கு தெரியும்
வள்ளுவரிடம் கேட்போம் தாடியின் ரகசியத்தை....

No comments:

Post a Comment